பிள்ளையாரை அபிஷேகம் செய்யும் போது திரும்பிய தேங்காய்.. வைரல் வீடியோ.. பரவசத்தில் பக்தர்கள்.!

பிள்ளையாரை அபிஷேகம் செய்யும் போது திரும்பிய தேங்காய்.. வைரல் வீடியோ.. பரவசத்தில் பக்தர்கள்.!


Lord Vinayagar Coconut Video Trending Truth Statement

சிறிய கோவில் ஒன்றில் இருந்த விநாயகர் சிலைக்கு அர்ச்சகர் அபிஷேகம் செய்த தருணத்தில், தேங்காய் திடீரென தனது நிலையை திருப்பி விநாயகரை பார்த்ததாக வீடியோ ஒன்று முகநூல் பக்கத்தில் வைரலாக பரவி வந்தது. 

இதனைக்கண்ட பல பக்தர்களும் இறைவனின் செயல் என்று ஆர்ச்சயத்துடன் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து பகிர்ந்து வந்தனர். ஆனால், அதனை கூர்ந்து கவனித்தால், தேங்காய் திருப்பியது தற்செயல் என்பது தெரியவரும். 

வீடியோவின் தொடக்கத்தில் கலச நீர் வைக்கப்பட்டு இருந்த குடத்தில் இருந்து தேங்காயை எடுத்து அர்ச்சகர் வைக்கிறார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த துணியின் நூலில் தேங்காய் சிக்கி இருந்ததால், கலசநீர் குடம் லேசாக திரும்பும். பின்னர், அர்ச்சகர் தீர்த்தத்தை விநாயகரின் மீது தெளித்து, கலசநீர் குடத்தினை எடுக்க முயற்சித்த போது, அதே நூலில் இணைக்கப்பட்டு இருந்த தேங்காய் தன் நிலையை மாற்றுகிறது. இதுவே உண்மையான தகவலாகும்.