ஆன்மிகம்

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது.! இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை.!

Summary:

இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வருகிறது.

கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று. சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயிர்த்தெழும் தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஏசுவை சிலுவையில் அறைந்ததன் 14 நிலைப்பாடுகளை உணர்த்தும் வகையில், கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொள்வது வழக்கம்.

இதன்படி சாம்பல் புதன்கிழமை தினத்தில் இருந்து இந்த 40 நாட்கள் உபவாசத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம். அந்த வகையில் சாம்பல் புதன் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மனிதரின் மரணத்தை நினைவூட்டும் விதத்தில் மனமாற்றம் அடைந்து, புதுவாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக நெற்றியில் சாம்பல் பூசுகின்றனர்.

இதனையடுத்து அணைத்து தேவாலயங்களிலும் வழிபாடு நடத்தப்பட்டன. இதனையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ளது. அன்றைய நாளில் இருந்து 3-வது நாள் இயேசு உயிர்ந்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வருகிறது.


Advertisement