குலதெய்வத்தின் முழு அருளை பெற வேண்டுமா? இதை செய்தால் போதும்!How to pray kulatheivam

உங்களுடைய வீட்டில் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் தங்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம். மேலும், உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் உங்கள் குலதெய்வத்தை தினமும் வழிபட வேண்டும்.

Kulatheivam

பலரும் தங்கள் குலதெய்வத்தை விட்டு விட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கி வருவது, குலதெய்வம் கோபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். குலதெய்வ வழிபாட்டை முறையாக கடைபிடிக்க விட்டால் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்காது.

எனவே, வாரம் ஒரு முறை குலதெய்வத்தை நினைத்து பூஜை செய்து வந்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் தேடி வந்து பரிபூரணங்களை அள்ளித் தருவார். அதன்படி, அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலை பெருக்கி, மாட்டு சாணத்தை தெளித்து, கோலம் போட வேண்டும்.

Kulatheivam

அதன் பின்னர் தலைக்கு குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் உள்ள குலதெய்வ படத்தை அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து, குலதெய்வத்தை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.