பள்ளி அருகே விளையாடிய 4 வயது சிறுமி திடீர் மாயம்! 2 நாட்களுக்கு பிறகு தோட்ட புதரில் கிடந்த சடலம்... தந்தை சொன்ன அதிரவைக்கும் உண்மை! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்...!!!



hardoi-missing-four-year-old-girl-found-dead

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் காணாமல் போன நான்கு வயது சிறுமி, இரண்டு நாட்களுக்குப் பிறகு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமான குழந்தையை போலீசாரும் குடும்பத்தினரும் தேடி வந்தனர். கிராமத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்

ஹர்தோய் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 13-ம் தேதி பள்ளி அருகே நான்கு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு தேடுதல் பணி தொடங்கியது.

இதையும் படிங்க: எங்க அப்பா மேல எப்படி கை வைக்கலாம்..! அதுக்கு தான் இது... தோசைக் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய 2 பெண்கள்! பகீர் சம்பவம்..!!!

தோட்டத்தில் புதர்களுக்கு இடையே சடலம் மீட்பு

இரண்டு நாட்களாகத் தொடர்ந்து தேடப்பட்டு வந்த சிறுமி, கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோட்டம் ஒன்றின் புதர்களுக்கு இடையே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதிர்ச்சியளிக்கும் வகையில், சிறுமியின் உடல் கிடைத்த அதே இடத்தில் இதற்கு முன்பு பத்து முறைக்கும் மேல் தேடியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். அப்போது எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மோப்ப நாய் படையுடன் போலீசார் விசாரணை

சிறுமியின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மோப்ப நாய் படை மற்றும் சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் உதவியுடன் சம்பவம் நடந்த பகுதியிலும், சுற்றியுள்ள இடங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி உயிரிழந்ததற்கான காரணம் மற்றும் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: விடுதி அறை வாசலில் திடீரென சுருண்டு விழுந்த புதுமணப் பெண்! அடுத்த 5 வினாடிகளில் நடந்த பயங்கரம்... நடந்தது என்ன? பகீர் சம்பவம்..!!!