எதைத்தொட்டாலும் சிக்கலா? உங்க ஜாதகத்தில் இப்படி இருக்குதா? கவனிங்க..!



Facing Problems in Everything? These Weak Sun Signs in Horoscope Could Be the Reason

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள முக்கிய விஷயங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.

இந்து சமய புராணங்களின்படி சூரிய பகவான் தனிநபரின் ஆற்றல், கெளரவம், வெற்றியின் சின்னமாக இருக்கிறார். இவர் ஜாதகத்தில் உயர்நிலையில் இருந்தால், அந்த நபர் சமூகத்தை வழிநடத்தலாம். சூரியன் குறைவாக, பலவீனமாக இருந்தால் குறித்த நபரின் தொழில், வாழ்க்கை, உடல்நலம், குடும்ப நலன் என அனைத்திலும் இழப்பை சந்திப்பார்.

உடல்நலம் பிரச்சனை:

சூரியன் தன்னம்பிக்கையின் காரணியாக கருதப்படுகிறார். அவரின் பலவீனம் என்பது ஒருவரை சின்னசின்ன விஷயங்களுக்கும் பதற்றம் அடையச் செய்யும். இதனால் முடிவெடுக்கும் திறன் இழக்கப்படும். சூரியன் எலும்புகள், பார்வைத்திறனுடன் தொடர்புடையவர். இவர் பலவீனமாக இருந்தால் இளம்வயதிலேயே கண்ணாடி அணிவது, மூட்டு வலியுடன் அவதிப்படுவது இருக்கும்.

இதையும் படிங்க: திருமணமான நபருடன் காதல்... செல்போன் கடையில் தற்கொலை செய்த கல்லூரி மாணவி.!! பகீர் பின்னணி.!!

astrology

இடர்கள் தொடரும்:

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் தந்தையை குறிக்கிறது. சூரியன் பலவீனமாக இருக்கும்பட்சத்தில், தந்தையுடன் சித்தாந்த ரீதியிலான கருத்து வேறுபாடு இருக்கும். தந்தையின் உடல்நலமும் மோசமடையலாம். இவர் எவ்வுளவுதான் கடினமான உழைப்பை வெளிப்படுத்தினாலும், அவருக்கு பணியிடம் / சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. தனது மீது தவறு இல்லை என்றாலும், அடிக்கடி பிறரின் அவதூறை எதிர்கொள்ள நேரிடும். அரசு வேலை வாய்ப்பு குறைவு, பணியிடத்தில் பதவி உயர்வு சிக்கல், உயர் அதிகாரிகளுடன் மனக்கசப்பு இருக்கும்.

தானம் செய்யுங்கள்:

பலவீன நிலையில் இருக்கும் சூரியன் ஒருவரை குறுகிய மனப்பான்மை கொண்டவராக மாற்றுவார். இதனால் மனசோர்வு, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இதனை சரிசெய்ய தினமும் காலை சூரியனுக்கு நீர் அர்ப்பணித்து சூரிய பகவானை வழிபடுவது நல்லது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து சூரியனை வழிபட வேண்டும். வெல்லம், கோதுமை, செம்பு, சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம். 'ஓம் கிரினி சூர்யாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.

இதையும் படிங்க: 2026 ஹோலாஷ்டக் காலம் தொடக்கம்! மிதுனம் முதல் மீனம் வரை.....அடுத்த 8 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு சோதனை நிறைந்த காலம்! தப்பிக்க இதுதான் வழி.....!!!