செய்வினை செய்துவிட்டார்கள் என்பது உண்மையா பொய்யா.? ஜோதிடர் பாலாஜிஹாசன் என்ன கூறியுள்ளார்?

செய்வினை செய்துவிட்டார்கள் என்பது உண்மையா பொய்யா.? ஜோதிடர் பாலாஜிஹாசன் என்ன கூறியுள்ளார்?


astrologer balaji haasan talk about seivinai

செய்வினை என்பது பழங்காலந்தொட்டு இலங்கை, கேரளா மற்றும் உலகின் பல பாகங்களிலும் ஒரு மனித சக்தியினை இன்னொருவரின் பூசை முறையினால் கட்டுப்படுத்தப்படும் செயலாக அழைக்கப்படுகின்றது. இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாத நிலையாகவே உள்ளது.

இந்தநிலையில் அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு  பிரபலமடைந்த  ஜோதிடர் பாலாஜி ஹாசன் ராசிபலன் குறித்த நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சிகளிலும் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆவார்.  இவர் கணித்த பல விஷயங்கள் நடந்திருப்பதால்தான் மிகவும் பிரபலமானார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்று பாலாஜி ஹாசன் கூறியது நடந்தது. அதேபோல் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என்றார். அதுவும் நடந்தது.

balaji haasan

ஜோதிடர் பாலாஜிஹாசன் அவரது முகநூல் பக்கத்திலும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இதனால் அவரது முகநூல் பக்கத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் இவர் "செய்வினை" என்பதை பற்றி ஒரு விளக்கம் கொடுத்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில், "செய்வினை என்னும் ராகுவின் விளையாட்டு இன்றளவும் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களிலும் கூட இன்னும் செய்வினை என்ற ஒரு செயல் நம்பப்பட்டு வருகிறது.

எனக்கு யாரோ செய்வினை செஞ்சுட்டாங்க.. அதனால் எனக்கு கஷ்டம் தொடர்ந்து வருகிறது.
என்று பலர் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த ஏழு ஆண்டுகால ஜோதிட  அனுபவத்தில் செய்வினை பற்றி அவரது கண்ணோட்டத்தை கூறியுள்ளார்.

அதில், செய்வினை செய்துவிட்டார்கள் என்று சொல்பவர்கள் பதட்டத்துடனே காணப்படுவார்கள், மேலும் தனக்கு இரவில் யாரேனும் அருகில் இருப்பது போன்றும் , என்னை யாரோ உற்று நோக்குவது போலவும், என்னை யாரோ ஒருவர் கண்காணிப்பது போன்றும் தோன்றும் என்பார்கள்.

இதனையடுத்து நன்றாகப் போய்க்கொண்டிருந்த தொழில் திடீரென்று தோல்வி ஏற்படும்,  நல்ல நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள், கணவன் - மனைவி இடையே நெருக்கம் குறையும், குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மன உளைச்சலைத் தருவார்கள். நன்றாக தூங்கிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று விடியற்காலை எழுந்து இருப்பார்கள்.

மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத உடல்நிலை கோளாறு ஏற்படும் சரியான காரணம் இல்லாமல் அடிக்கடி மருத்துவமனை செல்வார்கள். கெட்ட கனவுகள் மூலமாக கனவுகள் மூலம் பயமும் ஏற்படும் உறக்கம்  குறையும். தொடர்ந்து யாரோ அழுது கொண்டிருப்பது போல எனக்கு சத்தம் கேட்கிறதே என்று கூறுவார்கள். இரவில் திடீரென்று ஒரு கருப்பு பூனை அந்த வீட்டை சுற்றி வருவது போன்று சில சூழ்நிலைகள் நடக்கும். பசு மாடு பாதிக்கப்பட்டவர் வீட்டில் அருகில் இருந்தால் அது மிரண்டு ஓடும் அல்லது பாதிக்கப்பட்டவர் கால்நடை வளர்த்தல் அதில் பசு மாடுகள் இழக்கக்கூடும்.

காக்கைக்கு உணவு வைத்தால் உண்ணாது. நன்றாக வளர்ந்த செடிகள் வாடி போகும், பூஜை அறையில் விளக்கை எத்தனை முறை ஏற்றினாலும் அது அணைந்து போகும். இறந்துபோன முன்னோர்கள் அடிக்கடி அழுத முகத்துடன் கனவில் வருவார்கள். வாகனத்தில் போய்க் கொண்டிருக்கும் பொழுது நூலிழையில் மரணத்தை தழுவி இருந்திருப்பேன் என்ற பதட்டத்துடன் காணப்படுவார்கள்.

ஆனால் உண்மையில் இது அனைத்தும் ஜனன கால மாந்தி இருக்கக்கூடிய நட்சத்திரத்தில் ராகுவோ , கேதுவோ அல்லது ஜனன கால பாதக அதிபதி மீது சாய கிரகம் ( ராகு / கேது )  கடக்கும்  காலத்தில்  இந்த செயல்கள் அனைத்தும் நடக்கும். குறிப்பாக ஜனன கால மாந்தி மீது ராகு செல்லும்போது அந்த ஒன்றரை ஆண்டுகாலம் அந்த ராசி கட்டத்தை கடக்கும் வரையில் நான் மேலே சொன்னவைகள் நடக்க நேரிடும்.

ஆனால் இதை செய்வினை என்று சொல்லி " பயந்தவர்கள் கண்ணிற்கு இருப்பதெல்லாம் பேய் " என்று சொல்வார்கள். அதைப் பயன்படுத்தி செய்வினை செய்யக்கூடிய மாந்திரீகவாதிகள் என்ற போர்வையில் இருப்பவர்கள். தன்னை நாடி வருபவர்களை அவர்களால் இயன்ற அளவு அவர்களிடம் எந்த அளவிற்கு கரக்க முடியுமோ கரந்து விடுகிறார்கள். நான் கூறியதில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதனால் நீங்கள் 10 பேருக்கு இதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு உறுதுணையாக இருக்க முடியும். அது மிகப் பெரிய புண்ணியம். என பதிவிட்டுள்ளார். இவரது பதிவிற்கு பலரும் நன்றிகளை கூறி வருகின்றனர். இந்த பதிவு பிரபலமடைந்த இளம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் முகநூலில் உள்ளது.