இன்று, புரட்டாசி சனி.. மாஹாளய அமாவாசை.. சூரிய கிரஹணம்.. தவறாமல் இதை செய்யுங்கள்.!
சந்திரன், சூரியன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருகின்ற நிகழ்வுக்கு கிரகணம் என்று பெயர். நெருப்பு வளையம் என கூறப்படுகிற சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதியான இன்று இரவு 08:33 க்கு துவங்கி அதிகாலை 2:25 க்கு முடிவடைகிறது. இந்த கிரகணமானது இந்தியாவில் தெரியாது.
பசுபிக் கடல் பகுதிகளிலும், வட தென் அமெரிக்க கண்டங்களில் இருக்கும் நாடுகளிலும் இந்த கிரகணத்தை காண முடியும். இந்த கிரகணமானது அமாவாசை தினத்தில் ஏற்படுவதால் இது மிகவும் சிறப்பானது.

சனி அமாவாசையில் ஏற்படும் இது தவற விட கூடாத சூரிய கிரகணம் ஆகும். இந்த நாளில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது, அது பல நூற்றாண்டு பாவங்களை போக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த கிரகணத்தின் போது என்ன செய்யலாம்? செய்யக் கூடாது என்பதை பார்ப்போம்.!
இந்த கிரகணத்தின் போது அசைவம் சாப்பிடக்கூடாது.
பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த கிரகணத்தின் போது தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இந்த நேரத்தில் கர்ப்பம் ஏற்பட்டால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. அந்த சமயத்தில் ஏற்படும் கதிர்வீச்சுகளால் குழந்தைகளுக்கு அல்லது அவர்களுக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடும்.