விளையாட்டு

அம்மாவின் கேள்விக்கு தோனியின் மகள் கூறிய க்யூட் பதில்.. வைரலாகும் வீடியோ.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமானதை அடுத்து இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதியன்று நடைப்பெறவுள்ளது. மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சில நாட்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து அவரின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர். அதே சமயத்தில் தல தோனியும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தோனியின் மனைவி தனது மகளிடம் தோனியின் பென்சில் ஸ்கெட்ச் புகைப்படத்தை காண்பித்து இது யார் என கேட்கிறார். அதற்கு தோனியின் மகள் இது என்னுடைய அப்பா என்று க்யூட்டாக பதில் சொல்கிறது. 

மீண்டும் தோனியின் மனைவி, மகளிடம் உறுதியாக நீ சொல்கிறாயா? என்று கேட்க அதற்கு குழந்தை மகேந்திர சிங் தோனி, நான் உறுதியாக தான் கூறுகிறேன் என சொல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Papa s biggest fan !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on


Advertisement