பும்ரா பந்துவீச்சை இப்படிதான் எதிர்கொள்ள வேண்டும்; பேட்ஸ்மேன்களுக்கு ஜாம்பவான் லாரா எச்சரிக்கை.!

பும்ரா பந்துவீச்சை இப்படிதான் எதிர்கொள்ள வேண்டும்; பேட்ஸ்மேன்களுக்கு ஜாம்பவான் லாரா எச்சரிக்கை.!



world cup 2019 - pumrah bowling - batsmans - brain lara

உலக கோப்பை போட்டித் தொடர் இன்னும் சில தினங்களில் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கும் அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது.
 
மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறும்போது:

World cup 2019

இந்திய அணி  கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்கள் ஆடும் விதத்தை பார்க்கும்போது உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து போன்ற ஆடுகளத்தில் பந்துவீச்சு மிகவும் முக்கியமானது. 

பும்ரா சிறந்த பந்துவீச்சாளர். அவருடன் கோலி களமிறங்குவது சாதகமான விஷயம். பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கடினமான ஒன்று. இதுபோன்ற அட்டாகிங் பந்துவீச்சாளர் வரும் போது பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக்கை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

World cup 2019

அப்போது தான் பந்துவீச்சாளர்களுக்குக் கடினமாக இருக்கும். நான் பும்ராவின் பந்துவீச்சை எதிர்க்கொண்டால் முதலில் எனது ஸ்ட்ரைக்கை மாற்றிவிடுவேன். பும்ராவிடம் நல்ல ஆக்‌ஷன் இருக்கிறது. அவர் இந்தியாவின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்று  பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக லாரா தெரிவித்துள்ளார்.