வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டம்.. இமாலய இலக்கை எட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா..!

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டம்.. இமாலய இலக்கை எட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா..!



west-indies-set-big-total-in-2nd-odi

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின்‌ துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய்‌ ஹோப் மற்றும் கார்ல் மேயர்ஸ் ஆர்ம்பம்‌ முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீபக் கூடா வீசிய 10 ஆவது ஓவரின்‌ முதல் பந்தில் மேயர்ஸ் ஆட்டமிழந்தார்.

ind vs WI

அடுத்து களமிறங்கிய ப்ரூக்ஸ் 35 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்திலும் ப்ரான்டன் கிங் சாஹல் பந்தில் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். பின்னர் சாய் ஹோப்புடன்‌ ஜோடி சேர்ந்த‌ கேப்டன்‌ நிக்கோலஸ் பூரன் ஆர்ம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ind vs WI

பின்னர்‌ அதிரடியாக ஆடத்துவங்கிய‌ பூரன் சிக்சர் மழையை பொழிந்தார். 77 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஷர்துல் தாகூர்‌ பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களை விளாசினார். ஒரு முனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிய சாய்‌ ஹோப் தனது 100 ஆவது ஒருநாள் போட்டியில் 100 ரன்களை கடந்தார்.

ind vs WI

அடுத்து களமிறங்கிய ரோமன்‌ பவல் 13 ரன்னில் தாகூர் பந்தில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி  135 பந்துகளில் 115(4*8; 6*3) எடுத்த சாய் ஹோப் 49 ஆவது ஓவரில் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர்‌ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.