உலகம் விளையாட்டு

தொடரை வென்றாலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேப்டன்; ஐசிசி அதிரடி நடவடிக்கை.!

Summary:

west indies captan jasen holder susbend icc declare

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அடுத்து நடக்கும் டெஸ்ட் போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் எட்டாவது வீரராக களமிறங்கி இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்து நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜேசன் ஹோல்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி தெரிவிக்கும்போது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீசும் போது அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு அந்த அணியின் கேப்டன் தான் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற வகையில் ஜேசன் ஹோல்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.


Advertisement