நான் ஐபில் இல் இருந்தே கிளம்புறேன்! சிஎஸ்கே ரசிகர்களுக்கு உருக்கமான வீடியோ வெளியிட்ட வாட்சன்!

நான் ஐபில் இல் இருந்தே கிளம்புறேன்! சிஎஸ்கே ரசிகர்களுக்கு உருக்கமான வீடியோ வெளியிட்ட வாட்சன்!


Watson retired from IPL viral video

தான் ஓய்வு பெறுவது குறித்த அதிகாரபூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் வாட்சன்.

உலகளவில் உள்ள தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த வாட்சன். தற்போது சென்னை அணிக்காக விளையாடிவரும் இவர் பல்வேறு போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெற உறுதுணையாக இருந்துள்ளார். இவர் ஒரு ஆஸ்திரேலிய அணி வீரர் என்பதையும் தாண்டி தற்போது இவரை சென்னை அணி வீரர் என ரசிகர்கள் அவர்கள் மனதில் தனி இடம் கொடுத்துள்ளனர்.

ipl

நடப்பு ஐபில் சீசனில் தொடக்கத்தில் சற்று சொதப்பிய வாட்சன் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி சென்னை அணியை பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற செய்தார். இந்நிலையில் வாட்சன் ஐபில் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியானது.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக வாட்சன் தான் ஐபில் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை அணிக்காக விளையாடிய கடந்த மூன்று ஆண்டுகள் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக சிறப்பான காலம் என குறிப்பிட்டுள்ளார் வாட்சன்.