10 போட்டிகளில் செய்யாததை இன்று சிறப்பாக செய்த வாட்சன்! மகிழ்ச்சியில் சென்னை அணி ரசிகர்கள்!

10 போட்டிகளில் செய்யாததை இன்று சிறப்பாக செய்த வாட்சன்! மகிழ்ச்சியில் சென்னை அணி ரசிகர்கள்!


watson-hits-96-runs-for-csk-against-to-srh

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை மற்றும் கைதராபாத் அணிகள் மோதிவருகிறது. சென்னையில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோணி கைதராபாத் அணியை பேட் செய்ய அழைத்தார்.

முதலில் பேட் செய்த கைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். கைதராபாத் அணி சார்பாக மனிஷ் பாண்டே 83 ஓட்டமும், வார்னர் 57 ஓட்டமும் எடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டம் எடுத்தது.

IPL 2019

176 ஓட்டம் என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் அதிரடி வீரர் டுப்ளஸி தொடக்கத்திலையே ஆட்டம் இழந்தார். இந்நிலையில் இந்த ஐபில் சீசனில் ஒரு போட்டிகளில் கூட சோபிக்காத வாட்சன் இன்றைய ஆட்டத்தில் மிக சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 96 ஓட்டம் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த சீசனில் 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட 50 ரன்களை கடக்காத வாட்சன் இன்றைய ஆட்டத்தில் 96 ரன் எடுத்து சென்னை அணிக்கு மிகவும் ஆறுதலாக அமைந்துள்ளது.