இந்தாண்டு ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட நம்பமுடியாத சூப்பரான தருமாறு ஷாட்.! வைரல் வீடியோ

இந்தாண்டு ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட நம்பமுடியாத சூப்பரான தருமாறு ஷாட்.! வைரல் வீடியோ


warner best short in yesterday match

2022 ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணியின் துவக்க வீரர் வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய வார்னர் 92 ரன்களிலும், பவல் 67 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து  208  ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 186 எடுத்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


நேற்றைய ஆட்டத்தில் வார்னர் சிறப்பாக ஆடி  அவர் அடித்த 92 ரன்களில் பல அற்புதமான ஷாட்களைஅடித்தார். அதிலும் புவனேஷ்வர் குமார் வீசிய ஒரு பந்தில் இடதுகை வீரரான வார்னர் வலது கைக்கு மாறி ஒரு வித்தியாசமான ஷாட்டை அடித்து பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். இந்தாண்டு ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட நம்பமுடியாத சூப்பரான ஷாட் இது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து அந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர்.