தோல்விக்கு பின் விராட் கோலி பதிவிட்ட ஒற்றை புகைப்படம்.! விமர்சித்தவர்களுக்கு கொடுத்த செம்ம பதிலடி.!

தோல்விக்கு பின் விராட் கோலி பதிவிட்ட ஒற்றை புகைப்படம்.! விமர்சித்தவர்களுக்கு கொடுத்த செம்ம பதிலடி.!


virat-shared-photo

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூஸிலாந்து அணி தட்டிச்சென்றது. 

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. இவர் தலைமையிலான இந்திய அணி 7 ஐசிசி டிராபிகளில் விளையாடியுள்ளது. ஆனால் இதுவரை ஒன்றில் கூட அவர் தாய்மையிலான் அணி வெற்றிபெறவில்லை. இதனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் மாற்றப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில், இந்திய டெஸ்ட் அணியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில், இது ஒரு அணி மட்டுமல்ல, அழகான ஒரு குடும்பம். நாங்கள் ஒன்றாக முன்னேறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.