விராட்கோலி என்ன இதெல்லாம்..! ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானமே ஆடிப்போச்சு.. அப்படி ஒரு கேட்ச்.. வைரலாகும் வீடியோVirat Kholi viral catch video against Australia first Test match

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது விராட்கோலி பிடித்த அற்புதமான கேட்ச் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டி, T20 போட்டிகளை அடுத்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பேட்டிங் இறங்கியநிலையில், இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

தேநீர் இடைவெளியின் போது ஆஸ்திரேலிய அணி 92 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் 6-வது வீரராக கேமரூன் கீரின் களமிறங்கிய நிலையில், அவர் அஸ்வின் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயற்சித்தார். அவர் அடித்த பந்தும் வேகமாக எல்லைக்கோட்டை நோக்கி பறந்துகொண்டிருந்தநிலையில் திடீரென விராட்கோலி சூப்பர் மேன் போல் பறந்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார்.

யாரும் எதிர்பாராத அந்த கேட்ச் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.