இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விராட் கோலி வெளியிட்ட ட்வீட்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விராட் கோலி வெளியிட்ட ட்வீட்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!


virat kholi talk about bomb blast

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. 

இந்தநிலையில், இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பலா் உயிாிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அப்பகுதியில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 100 க்கு மேலானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தநிலையில், இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவ செய்தி தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி கூறியுள்ளார். கொழும்பில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், இலங்கையில் இருந்து வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது, இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என்னுடைய பிரார்த்தனைகள், இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.