ஆஹா என்ன ஒரு ஆச்சர்யம்! 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அரையிறுதியில் மோதும் கேப்டன்கள்

ஆஹா என்ன ஒரு ஆச்சர்யம்! 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அரையிறுதியில் மோதும் கேப்டன்கள்


Virat kholi and Williamson meeting after 11 years in semifinal

2019 ஐசிசி உலக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றன. இதன் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. 

அரையிறுதியில் வரும் செவ்வாய்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்தும், வியாழக்கிழமை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். 

wc2019

செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் மோதும் இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும், நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சனும் உள்ளனர். இவர்கள் இருவரும் அரையிறுதியில் கேப்டனாக மோதிக்கொள்வது இது முதல் முறையல்ல. 

wc2019

2008ல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளும் மோதின. அந்த போட்டியில் வென்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

wc2019

11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அரையிறுதியில் விராட் கோலி மற்றும் வில்லியம்சன் இருவரும் மோதவுள்ளனர். அன்று வென்றது போலவே இந்த முறையும் இந்தியா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இல்லை வில்லியம்சன் பலிவாங்க போகிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.