இந்தியா விளையாட்டு

மைதானத்துக்குள் வெறித்தனமாக ஓடிவந்து விராட் கோலியின் காலில் விழுந்த ரசிகர்! விராட் செய்த செயல்!

Summary:

virat fan touch virat in stadium


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரண்டு அணிகள் மோதிய முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தில் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்தார். அவர்  மைதானத்துக்குள் திடீரென நுழைந்து விராட் கோலியின் பாதங்களை தொட்டு வணங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியான விராட் அவரை எழுப்பி அவரின் தோள்ப்பட்டையில் கைபோட்டுக்கொண்டு அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இதனைப்பார்த்த மைதான பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து அழைத்துச்சென்றனர். விராட் கோலி அந்த ரசிகரை எதுவும் செய்ய வேண்டாம் என்றும், பாதுகாப்பாக அவரை அங்கிருந்து அழைத்துச் செல்லும் படியும் பாதுகாவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அந்த ரசிகரின் உடல் முழுதும் வி.கே என விராட் கோலியின் சுருக்கமான பெயரை பெயிண்ட்டால் எழுதியிருந்தார். மேலும், விராட் கோலியின் ஜெர்சி எண் 18 ஐயும் அந்த ரசிகர் அவரது முதுகில் பெயிண்ட்டால் எழுதியிருந்தார். அந்த ரசிகரிடம் விசாரணை செய்ததில், அவரின் பெயர் சூரஜ் பிஸ்த் என்பதும், அவர் உத்தரகண்ட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.


Advertisement