
virat and ms Dhoni Gift very lucky
தனக்கு ஜெர்ஸியை கொடுத்த தோனி மற்றும் கோலி இருவருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முடிந்து ஒன்றரை மாதம் ஆகும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், இந்தியாவிற்கு எதிரான கடைசி தொடரில் விளையாடியபோது தோனி மற்றும் கோலி எனக்கு தங்கள் ஜெர்ஸியை கொடுத்தது மிக அதிர்ஷ்டமானது. நான் விளையாடிய அனைத்து போட்டிகளில் இந்திய தொடரில் விளையாடிய 2 போட்டிகளை பெருமையாக மதிக்கிறேன்.
இந்த வாய்ப்பை எங்களுக்கு தந்ததால் பெருமை படுவதற்கும், பாராட்டுவதற்கும் இது முக்கிய நேரமாகும் என பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement