இந்தியா விளையாட்டு WC2019

இந்திய அணியின் ஆட்டத்தை பார்க்க வந்து அசிங்கப்பட்ட விஜய் மல்லையா! பரபரப்பு வீடியோ காட்சி

Summary:

Vijay mallaya teased by cricket fans

இந்திய வங்கிகளில் பணமோசடியில் ஈடுபட்டு லண்டனில் குடியேறியிருக்கும் விஜய் மல்லையா தனது மகனுடன் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை காண வந்துள்ளார்.

இந்திய வங்கிகளில் சுமார் 9,000 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திருப்பி தராமல் வெளிநாடு தப்பி சென்றவர் விஜய் மல்லையா. லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்குக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதின. இந்த போட்டியினை காண விஜய் மல்லையா தனது மகனுடன் மைதானத்திற்கு வந்துள்ளார்.

ஓவல் மைதானத்திற்கு வந்த விஜய் மல்லையாவிடம் செய்தியாளர் இந்தியாவிற்கு மீண்டும் திரும்புவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நான் இங்கு வந்தது மேட்ச் பார்க்க மட்டும் தான் வந்தேன் என்று கூறி உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார். 


மேலும் போட்டி முடிந்து ஓவல் மைதானத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்த விஜய் மல்லையாவை பார்த்த ரசிகர்கள் “திருடன்“ “திருடன்“ என கோஷமிட்டனர். மேலும் நீ மனிதனாக இருந்தால் உன் நாட்டிடம் மன்னிப்பு கேள் என்றும் கூச்சலிட்டனர். இதை எல்லாம் பொறுத்படுத்தாமல் அங்கிருந்து விஜய்மல்லையா நகர்ந்து சென்றார்.


Advertisement