விளையாட்டு

தமிழகத்தை சேர்ந்த மாயாஜால பந்துவீச்சாளருக்கு இந்திய அணியில் வாய்ப்பு.. குவிந்து வரும் பாராட்டுக்கள்!

Summary:

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.

இந்தியாவின் டி20 அணியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளார். இந்திய அணிக்காக முதல்முறையாக அவர் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
 
மேலும் இவரது மிஸ்டரி பந்துவீச்சை கணிக்க முடியாமல் பல சர்வதேச முன்னனி வீரர்களும் தடுமாறி வருகின்றனர். விக்கெட்டுகள் மட்டுமின்றி ரன் விகிதமும் குறைவாக கொடுத்துள்ளார் வருண் சக்கரவர்த்தி.


Advertisement