விஷயம் இப்படி போகுதாமே!! மாஸ் பிளான் போட்ட சிஎஸ்கே.!! வேண்டாமென்று விலகும் வீரர்கள்..!!
விஷயம் இப்படி போகுதாமே!! மாஸ் பிளான் போட்ட சிஎஸ்கே.!! வேண்டாமென்று விலகும் வீரர்கள்..!!

சென்னையில் விளையாட இரண்டு பிரபல வீரர்கள் மறுத்ததாக கூறும் தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் விளையாடுகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகிவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியில் இருந்து பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். இதனால் சென்னை அணி அவருக்கு பதிலாக வேறொரு வீரரை அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முன்னதாக சென்னை அணி ஹேசல்வுட்க்கு பதிலகா பேட்ஸ்மேன் ஒருவரை களமிறக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது சென்னை ஹேசல்வுட்க்கு பதிலாக பவுலர் ஒருவரையே தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லி ஸ்டேன்லேக் (Billy Stanlake) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரீஸ் டாப்லி (Reece Topley) ஆகிய வீரர்களை மாற்று வீரர்களாக களமிறக்க சென்னை அணி முயற்சி செய்து, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.
ஆனால் குறிப்பிட்ட இரண்டு வீரர்களும் சென்னை அணியில் விளையாட மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கவுண்டி கிரிக்கெட் போட்டி ஒப்பந்தம் மற்றும் இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி வீரர்கள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.