முதல் போட்டியிலே சென்னை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா.! எப்படி சமாளிக்க போகிறார் தோனி.? கடும் வருத்தத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.!

முதல் போட்டியிலே சென்னை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா.! எப்படி சமாளிக்க போகிறார் தோனி.? கடும் வருத்தத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.!


three csk player not play in first match

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. வழக்கம் போல நடப்பு சாமியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த ஐபிஎல் சீசனில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

 இதற்காக சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்தநிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர்களில்
3 பேர் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் தொடக்கமே சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. தீபக் சஹார் மீது அதீத நம்பிக்கை வைத்து ரூ.14 கோடிக்கு எடுக்கச்சொன்னார் தோனி. ஆனால் காயம் காரணமாக அவரால் முதல் பாதி தொடரில் விளையாட முடியாது என அறிவிப்பு வெளியானது.

எனவே நல்ல வேகமாக பந்துவீசக்கூடிய பவுலராக டுவைன் பிரிட்டோரியஸை தேர்வு செய்தார். இந்த சூழலில் தான், பிரிட்டோரியஸ் இன்னும் இந்தியா வரவில்லை. வங்கதேசத்துடனான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதனை முடித்துவிட்டு நாளைய தினம் பிரிட்டோரியஸ் இந்தியா வந்தாலும், 3 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்.

இதனால் அவரால் மார்ச் 26ல் நடைபெறும் கொல்கத்தாவுடனான முதல் லீக் போட்டியில் பங்கேற்க முடியாது. அதேபோல் தோனியின் நம்பிக்கை நாயகன் மொயீன் அலி வரவில்லை. விசா பிரச்சினை காரணமாக அவர் தாமதமாக தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார். இப்படி மூன்று முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடக்கத்தில் சென்னை அணியுடன் இணையமாட்டார்கள் என்பதால் இதை தோனி எப்படி சமாளிப்பார் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.