விளையாட்டு

மழையால் தப்பித்த பாக்கிஸ்தான்.. 10 வருடங்களுக்கு பின் தொடரை வென்ற இங்கிலாந்து அணி!

Summary:

Third match draw england win the series

இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 1-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 583 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய பாக்கிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 273 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் ஆனது.

தொடர்ந்து பாக்கிஸ்தானை இரண்டாவது இன்னிங்சை துவங்குமாறு இங்கிலாந்து அணி கேட்டுக்கொண்டது. நான்காவது மற்றும் ஐந்தாம் நாட்களில் தொடர்ந்து மழை பெய்ததால், ஐந்தாம் நாளின் கடைசியில் மட்டும் போட்டி நடைபெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் 83.1 ஓவர்கள் விளையாடிய பாக்கிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றதால் 1-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியது. பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 2010 ஆண்டிற்கு பிறகு இப்போது தான் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.


Advertisement