விளையாட்டு

டி20 வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த தாய்லாந்து மகளிர் அணி!

Summary:

Thailand women cricket team breaks australia record

டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 17 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா மகளிர் அணியின் சாதனையை முறியடித்துள்ளனர் தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியினர். 

நெதர்லாந்து, தாய்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குகொள்ளும் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை நெதர்லாந்து அணியை தாய்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றி தாய்லாந்து அணிக்கு தொடர்ந்து கிடைக்கும் 17 ஆவது டி20 வெற்றியாகும். 2018, ஜூலை மாதம் ஐக்கிய அரபு அணியை வென்ற தாய்லாந்து தற்போது தொடர்ந்து 17 முறை வெற்றி பெற்றுள்ளது. 

இதற்கு முன்னதாக மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரை ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ந்து 16 டி20 போட்டிகளில் வென்றது. தற்போது அந்த சாதனையை முறியடித்து தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது. 

இந்த அணிகளை தவிர இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே 14, நியூசிலாந்து 12,  மீண்டும் ஆஸ்திரேலியா 12 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளன. இதில் ஜிம்பாப்வே மட்டும் தற்போது 14 வெற்றிகளில் உள்ளது. மேலும் தொடர் வெற்றிகளை பெற்றால் விரைவில் தாய்லாந்து அணியின் சாதனையை ஜிம்பாப்வே முறியடித்து விடும். 


Advertisement