அரையிறுதிக்காக ஆஸ்திரேலியா அணியில் அதிரடி மாற்றம்! அணியில் இணையும் புதிய வீரர்கள்

அரையிறுதிக்காக ஆஸ்திரேலியா அணியில் அதிரடி மாற்றம்! அணியில் இணையும் புதிய வீரர்கள்


team-change-in-australia-for-semifinal

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 

முக்கியமான ஆட்டத்தில் ஆடுவதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் வீரர்களான கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டாயின்ஸ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஸ்டாயின்ஸ் மட்டும் குணமடைந்தால் அவர் நேற்று வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் நாளைய போட்டியில் ஆடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

wc2019

ஆனால் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் இருவருமே தற்போது ஆடும் நிலையில் இல்லை என்பதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை களமிறக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

wc2019

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக ஆடியும் உலக்கோப்பை அணியில் இடம்பெறாமல் போன ஹாண்ட்ஸ்கோம்ப், கவாஜாவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நாளைய போட்டியில் ஆடும் லெவனில் இருப்பார் என்று தான் தோன்றுகிறது. ஷான் மார்ஷ்க்கு பதிலாக மாத்தியூ வேட் அணியில் இணைகிறார்.