ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.! திடீர்னு இப்டி சொல்லிட்டாரே.!

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.! திடீர்னு இப்டி சொல்லிட்டாரே.!


Suresh raina announced retirement

இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கிய வீரராக செயல்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து ஐபிஎல்-ல் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

ஆனால் கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது 2வது சுற்றில் கூட சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் மற்ற அணிகளும் அவரை வாங்காததால், கடந்த ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில், சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது நாட்டையும் உ.பி. மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். பிசிசிஐ, உ.பி. கிரிக்கெட் (UPCAC) சென்னை ஐ.பி.எல், ராஜீவ் சுக்லா மற்றும் எனது ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கும் எனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என ரெய்னா பதிவிட்டுள்ளார்.