விராட் கோலி படையை வெளுத்துவாங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்.!

விராட் கோலி படையை வெளுத்துவாங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்.!


sunrisers hyderabad won RCB team

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டியின் 52வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக பிலிப்பெ மற்றும் படிக்கல்களமிறங்கினர். சிறப்பாக ஆடிய பிலிப்பெ 31 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பெங்களூரு அணியின் ஏபிடி 24 ரன்களும், வாஷிங்க்டன் சுந்தர் 21 ரன்களும் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

SRH vs RCB

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கினர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர். அந்த அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சஹாகளமிறங்கினர், வார்னர்  8 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். விருத்திமான் சஹா 39 ரன்களில்  ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டே 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவரும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.