இந்தியா விளையாட்டு

மீண்டும் களத்தில் இறங்க தயாரான வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்! காரணம் என்ன தெரியுமா?

Summary:

srisanth comming soon

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம்வந்த ஸ்ரீசாந்த் கடந்த 2013ம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவருடன் சேர்த்து அந்த அணியில் விளையாடிய அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சவான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீசாந்த், வழக்கில் தன்னை குற்றமில்லாதவர் என நிரூபித்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேருக்கும் வாழ்நாள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார் ஸ்ரீசாந்த். கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஸ்ரீசாந்த்தின் தண்டனையை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் படி உத்தரவிட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி ஜெயின், ஸ்ரீசாந்த் குறித்து முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதில், ஸ்ரீசாந்த் கடந்த 13.09.13 முதல் 7 ஆண்டுகளுக்கு எந்த வகையான வணிக கிரிக்கெட்டிலும் பங்கேற்கவோ அல்லது பி.சி.சி.ஐ அல்லது அதன் துணை நிறுவனங்களின் எந்தவொரு நடவடிக்கைகளுடனும் தொடர்பு கொள்ளவோ தடை விதித்திருந்தது.

இதன்படி அவரது தடை காலம் 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடையும். அதன் பிறகு எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடலாம். இப்போது அவருக்கு 36 வயது ஆகிறது.

இந்தநிலையில் ஸ்ரீசாந்த் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்காக பிரார்த்தனை செய்த எனது நலம்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 


Advertisement