அடி தூள்.. ஹாட்ரிக் வெற்றி..! புள்ளிபட்டியலில் கெத்து காட்டும் சன்ரைசர்ஸ் அணி.!

அடி தூள்.. ஹாட்ரிக் வெற்றி..! புள்ளிபட்டியலில் கெத்து காட்டும் சன்ரைசர்ஸ் அணி.!


srh won yesterday match

2022 ஐ.பி.எல். தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175  ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் திரிபாதி அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார் தொடர்ந்து விளையாடிய அவர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும், அந்த அணியின் மார்க்ரம் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதுவரை சன்ரைசர்ஸ் அணி ஆடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன்  புள்ளிபட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளது.