விளையாட்டு

வில்லியம்சன் ஏன் இப்படி பண்ணுனாரு? புலம்பும் ஹைதராபாத் அணி ரசிகர்கள்!

Summary:

SRH captain villiyamsan wrong decision in 18th over

ஐபில் சீசன் 12 வரும் ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. மும்பை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியிடம் ஹைதராபாத் அணி படுதோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியின் தோல்விக்கு அணியின் கேப்டன் வில்லியம்சனும் ஒரு காரணம் என்று புலம்பி வருகின்றனர் ஹைதராபாத் அணி ரசிகர்கள்.

முதலில் பேட் செய்த கைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன் எடுத்தது. 163 என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி தோற்றுவிடும் என்ற நிலை வந்த போது அதை தலைகீழாக திருப்பி போட்டது ஹைதராபாத் அணியின் 18 வது ஓவர்.

பாசில் தம்பி வீசிய 18 வது ஓவரில் ரிஷாப் பன்ட் 22 ரன்களை விளாசினார். 18 வது ஓவரை தம்பியிடம் கொடுத்ததே கேப்டன் வில்லியம்சன் செய்த மிகப்பெரிய  தவறாகும். கலீல் அஹ்மத் சிறப்பாக பந்து வீசி கொண்டிருந்த நிலையில் அவருக்கு ஓவர் இருந்ததும் அவரை பயன்படுத்தாமல் பாசில் தம்பியிடம் ஓவரை கொடுத்து வில்லியம்சன் எடுத்த முடிவு தவறாக முடிந்தது.


Advertisement