பயிற்சியிலேயே சேட்டையை ஆரம்பித்த கிறிஸ் கெய்ல்... வைரலாகும் அசத்தல் வீடியோ.!

பயிற்சியிலேயே சேட்டையை ஆரம்பித்த கிறிஸ் கெய்ல்... வைரலாகும் அசத்தல் வீடியோ.!


sports/kxip-releases-a-new-video-of-chris-gayle-gone

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமானதை அடுத்து இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

இதனையடுத்து அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரும், பல ஐ.பி.எல் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான கிறிஸ் கெய்ல் பயிற்சியில் ஈடுப்பட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

gayleபொதுவாக கிறிஸ் கெய்ல் ஜாலியாக இருக்கக்கூடியவர், அனைத்து வீரர்களுடனும் குறும்பாக ஏதேனும் செயலை செய்யக்கூடியவர். அந்த வகையில் பயிற்சியின் போது கிறிஸ் கெய்ல் செய்த சேட்டையானது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பவுண்டரி லைன் அருகே நிற்கும் கிறிஸ் கெயில், லைனில் கால் வைத்துக் கொண்டு பந்தை பிடித்து, பிறகு மிகவும் கடினமாக அந்த கேட்சை எடுத்தது போல, பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே தட்டி விட்டு மீண்டும் அதனை கேட்ச் செய்கிறார்.