தோள்பட்டையில் அடிவாங்கிய ஸ்மித்! நடுவருடன் காரசார வாக்குவாதம்!

தோள்பட்டையில் அடிவாங்கிய ஸ்மித்! நடுவருடன் காரசார வாக்குவாதம்!


smith angry on umpire

நியூசிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஸ்டீவ் ஸ்மித் 77 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரங்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது நியூசிலாந்து வீரர், வாக்னர் வீசிய பந்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அடிக்காமல் தொடையில் வாங்கிக்கொண்டு ரன் ஓட முயற்சித்தார்.

ஆனால் நடுவர், அந்த பந்தை டெட் பால் என அறிவித்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வாக்னர், மீண்டும் அதே ஓவரின் 5வது பந்தை பவுன்சராக வீசினார். அப்போது அந்த பந்து ஸ்டீவ் ஸ்மித்தின் தோள்பட்டையில் தாக்கியது. அந்தநிலையிலும் ஸ்மித் ரன் ஓட முயற்சி செய்த போது, நடுவர் அதனை டெட் பால் என அறிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்மித், நடுவர் நைகல் லாங்குடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அவருக்கு ஈடாக தான் கூறியது சரி என்று, நைகல் லாங்குடன் பின்வாங்காமல் வாக்குவாதம் செய்தார். இதனால் மைதானமே பரபரப்புக்குள்ளானது.