தமிழகம் சினிமா விளையாட்டு

தோனி இன்னும் 5 வருடங்கள் விளையாட முடியும் - சேப்பாக்கத்தில் சிவகார்த்திகேயன் பேட்டி

Summary:

Sivakarthikeyan talks about dhoni at chepauk

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தல தோனி விளையாடாதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இன்று ஆட்டம் துவங்குவதற்கு முன்னர் ஹீரோ படத்தின் ப்ரோமஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் மைதானத்திற்கு வருகை தந்தனர். 

அப்போது பேசிய சிவகார்த்திகேயன் இன்றைய போட்டியில் தல தோனி இல்லாதது வருத்தமளிக்கிறது என்றும் தோனி விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பேசினார். 

மேலும் தோனி குறித்து பேசிய சிவகார்த்திகேயன், தோனி இன்னும் 5 வருடங்கள் இந்திய அணிக்காக ஆட வேண்டும். அவருக்கு இருக்கும் உடல் வலிமைக்கு அவரால் நிச்சயம் இன்னும் 5 வருடங்கள் ஆடலாம் என்றும் கூறினார். 


Advertisement