சினிமா விளையாட்டு

நடிகர் சிவகார்த்திகேயனால் நிறைவேறிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரின் கனவு.!இந்தியாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை!!

Summary:

sivakarthicken help to physically challenged cricket player

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் சச்சின் சிவா. இவர் மாற்றுத்திறனாளிக்கான தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியின் தலைவராக உள்ளார். மேலும் இந்திய மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட்டு வீரராகவும் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா மற்றும் நேபாளம்க்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் சச்சின் சிவாவும் கலந்துகொண்டார். மேலும் அதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வென்றது. 

சச்சின் சிவா க்கான பட முடிவு

இந்நிலையில் சச்சின் சிவா முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வெற்றிபெற்றதால், தங்களுக்கு வழங்கப்பட்ட  வெற்றிக் கோப்பையை தனது உறவினர்களுக்கும், உறுதுணையாக இருந்தவர்களுக்கும் காண்பிப்பதற்காக அவர் தன்னுடன் கொண்டு வந்துள்ளார்.

 இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள எனக்கு பலரும் உறுதுணையாக உள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி மேலும் எனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் பெருமளவில் உதவியுள்ளார். எனது மாபெரும் நன்றி என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
 


Advertisement