வாய் கூசாம இப்படி திட்றாங்க.. சிராஜை மீண்டும் சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்... இந்தமுறை என்ன சொன்னாங்க தெரியுமா.?

வாய் கூசாம இப்படி திட்றாங்க.. சிராஜை மீண்டும் சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்... இந்தமுறை என்ன சொன்னாங்க தெரியுமா.?


Siraj fields shouts of grub from unruly group of fans at Gabba

இந்திய அணி வீரர் சிராஜை ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் மீண்டும் சீண்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில் தற்போது நடந்துவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடிவருகிறது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்களை ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் இனவெறியுடன் சீண்டி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்திய அணி வீரர் சிராஜ் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எல்லை கோடு அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த போது ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் அவரை குரங்கு, நாய் என இன ரீதியாக கேலி செய்தனர். அப்போது அது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகளவு வைரல் ஆனது.

இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டதோடு, இனி இதுபோன்ற சம்பவம் தொடராது எனவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணி வீரர் சிராஜ் எல்லை கோட்டின் அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, மீண்டும் ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் அவரை சீண்டியுள்ளனர். இந்தமுறை அவரை, "முதுகெலும்பில்லாத புழு" என அவரை வம்பிழுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி ரசிகர்களின் இந்த மோசமான செயல் இந்திய அணி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.