இந்தியா விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை.! முகமது சமி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

Summary:

இந்திய டெஸ்ட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை.! முகமது சமி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளாா். இந்தநிலையில் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரை 1-2 என இந்தியா இழந்தது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினாா். தற்போது பிசிசிஐ, தலைமைப் பயிற்சியாளா் ராகுல் டிராவிட் ஆகியோா் புதிய கேப்டனை அடையாளம் காணும் பணியில் உள்ளனா்.

இந்நிலையில் புதிய கேப்டன் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறுகையில், நிச்சயமாக, டெஸ்ட் அணிக்கு ஒரு தலைவர் தேவை. புதிய கேப்டன் தலைமையில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் தொடரை ஆட உள்ளோம். உள்ளூா் என்பதால் நமது அணிக்கு சில சாதகங்கள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக பந்துவீச்சாளா்கள் ஒரு பிரிவாக இணைந்து செயல்பட வேண்டும். நானும் அதிக கவனம் செலுத்துவேன். கேப்டன் பதவியை யார் எடுப்பது என்பது பற்றி நான் சிந்திக்கவில்லை. எங்களிடம் ரோஹித் , அஜிங்க்யா ரஹானே உள்ளனர். எல்லாம் நல்லதாக இருந்தாலும் முக்கியமானது போட்டி முடிவுதான் என கூறியுள்ளார்.


Advertisement