உலகம் விளையாட்டு

அனைவருக்கும் மிக்க நன்றி! மனைவி மற்றும் மகள்கள் குறித்து கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!

Summary:

Shakid afridi tweet about wife and daughter rescue from corono

பாகிஸ்தான் அணியின் அதிரடி கிரிக்கெட் வீரரான ஷாகித் அப்ரிடிக்கு கடந்த மாதம் 13ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என சமூக வலைத்தளத்தில் அப்ரிடி  பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைதொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றநிலையில் அவரது உடல் நலம் தேறியதாக தகவல்கள் வெளியானது.

 

இந்நிலையில் தற்போது அப்ரிடி அவரது மனைவியும், இரு மகள்களும் கொரோனாவிலிருந்து மீண்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், எனது மனைவி, இருமகள்கள் அக்ஸா மற்றும் அன்சாவிற்கு இதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

 இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் எனது மனைவி மற்றும் மகள்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்களது தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்க வேண்டும். தற்போது நான் மீண்டும் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க உள்ளேன் என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement