சரியான நேரத்தில் தோனிக்கு வாய்ப்பு கொடுத்து, அவரை சாதனையாளராக்கிய முன்னாள் நட்சத்திர வீரர்!.
இந்திய அணியில் வெற்றித் தலைவர்களில் ஒருவர் தான் கங்குலி, இவர் தலைமையிலான இந்திய அணி பல சாதனை வெற்றிகளை பெற்றுள்ளது. இடது கை மட்டையாளரான இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்திய அணியில் அசைக்க முடியாத தூண்களாக திகழ்ந்த சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்ற போது இந்திய அணியின் தலைவராக சவ்ரவ் கங்குலி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கங்குலி அளித்த பேட்டி ஒன்றில், தோனி 2004-ஆம் ஆண்டு அணியில் இடம் பெற்ற போது முதல் இரண்டு போட்டிகளில் 7-வது இடத்தில் தான் களமிறங்கினார். அங்கு அவர் வாய்ப்பு கிடைக்காததால் அவரின் திறமையை வெளிப்படுத்த முடியாமல் இருந்தார். அவருக்குள் இருந்த திறமை எனக்கு புரிந்தது, அதனால் அவருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்து அந்த வாய்ப்பினை அவருக்கு கொடுத்தேன் என கூறினார்.
மேலும் அதன் பின் நடந்த போட்டிகளில் வழக்கமாக 7-வது இடத்தில் இறங்குவோம் என்று எண்ணி தோனி ஷார்ட்ஸ் அணிந்து உட்கார்ந்திருந்தார். நான் அவரிடம் சென்று அடுத்து நீ தன் களமிறங்க வேண்டும் என கூறினேன். அதற்கு அவர் நீங்கள் இறங்கவில்லையா என கேட்டார். நான் 4-வது தாக இறங்குகிறேன் நீ இறங்கு என கூறி தோனியை அனுப்பினார்.
கங்குலி நினைத்தது போன்றே அந்த போட்டியில் கங்குலியின் கணிப்பிற்கு ஏற்றவாறு தோனி 15 பவுண்டரி, 4 சிக்சர் என 148 ஓட்டங்கள் எடுத்து விளாசினார் விளாசினார். அந்த ஆட்டமே தோனிக்கு திருப்புமுனையாக அமைந்தது.