இந்தியா உலகம் விளையாட்டு

சானியா மிர்சாவிற்கு என்ன குழந்தை தெரியுமா? உற்சாகத்தில் சோயிப் மாலிக்!

Summary:

saniya mirza blessed with boy baby

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக தகவலை வெளியிட்டார். 

மேலும் தாம் கருவுற்ற நாள் முதல் புகைப்படங்களையும், சந்தோஷ தருணங்களையும் தமது ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியாக  கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில்  அவரது வளையல்காப்பு நிகழ்ச்சியின் போது அவர் வெளியிட்ட புகைப்படம்  ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

saniya mirza pregnant photos க்கான பட முடிவு

இதனைத் தொடர்ந்து இன்று காலை சானியா மிர்சாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் சானியாமிர்சா வழக்கம்போல் திடமுடன் இருப்பதாகவும் சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர்களுக்காக வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார் சோயிப் மாலிக். 


Advertisement