இந்தியா விளையாட்டு

இதுவே எனது கடைசி சீசன்.. திடீரென டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விடுத்த அதிரடி அறிவிப்பு! இதுதான் காரணமா??

Summary:

இதுவே எனது கடைசி சீசன்.. திடீரென சானியா மிர்சா விடுத்த அதிரடி அறிவிப்பு! இதுதான் காரணமா??

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் டென்னிஸ் வீராங்கனையாக விளையாட துவங்கி, இந்தியாவிற்கு பல பெருமைகளை சேர்த்தவர் சானியா மிர்சா. அவர் இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும் அவர் திகழ்ந்து வருகிறார்.

சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் சானியா மிர்சா தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடிய நிலையில் முதல் சுற்றுடன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தனது ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதுதான் எனது கடைசி சீசன். என்னால் இப்போது காயமடைந்தால் உடனடியாக மீண்டு வர இயலவில்லை. இன்றும் எனது முழங்கால் வலிக்கிறது. அதனால் நாங்கள் தோற்றுவிட்டோம் என கூறவில்லை. எனக்கு காயத்தில் இருந்து குணமடைய நீண்ட காலம் எடுக்கிறது. 

 மேலும் எனது மூன்று வயது மகனுடன் பல இடங்களுக்கும் பயணம் செய்வதால், அவனுக்கும் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. எனவே இந்த சீசனுடன் ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement