விளையாட்டு

பந்துவீச்சில் மட்டுமல்ல சமையலிலும் கில்லாடி என நிரூபித்த சைனி! வைரலாகும் வீடியோ

Summary:

Saini cooks fruit smoothie for manish pandey

இந்திய கிரிக்கெட் அணியில் சமீபத்தில் இடம்பிடித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார் வேகப்பந்து வீச்சாளர் சைனி. இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடினார். 

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் 19 ஆவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். ஆட்டம் டையில் முடிய இந்த ஓவர் முக்கிய பங்காற்றியது. 

பந்துவீச்சில் மட்டுமல்ல சமையலிலும் நான் கெட்டிக்காரன் என நிரூபித்துள்ளார் சைனி. ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் உலர் பழ வகைககளை கொண்டு ப்ரூட் ஸ்மூத்தி என்ற ஜூஸ் வகையை இன்று செய்துள்ளார். 

அப்போது அருடன் இருந்த மனிஷ் பாண்டேவிடம் அதன் செய்முறையை சொல்லியவாரே செய்துள்ளார். பின்னர் அதனை சாப்பிட்ட மனிஷ் பாண்டே மிகவும் சுவையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 


Advertisement