விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடிய சச்சின்டெண்டுல்கர்!

விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடிய சச்சின்டெண்டுல்கர்!


sachin tendulkar celebrate vinayagar chathurthi


இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து, அதற்கு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், கண்மாய், ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

எனவே இந்த ஆண்டு மிக எளிமையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகரை வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்போவான் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் விநாயகருக்கு பிரார்த்தனை செய்து வழிபட்டுள்ளார்.