சச்சின் வாங்கிய முதல் கார்! தற்போது அவரிடம் இல்லை.. அந்த காருக்காக ஏங்கும் சச்சின் டெண்டுல்கர்!

சச்சின் வாங்கிய முதல் கார்! தற்போது அவரிடம் இல்லை.. அந்த காருக்காக ஏங்கும் சச்சின் டெண்டுல்கர்!


sachin talk about his first car

சச்சின் டெண்டுல்கர் முன்னாள் இந்திய அணியின் அதிரடி நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் பேட்டிங்கில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார். இவர் பதினொரு வயதுமுதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

விளையாட்டு வீரர்களுக்கு கார்கள் மீதான மோகம் அதிகம் இருக்கும். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரும் கார்கள் மீது அதிகம் மோகம் கொண்டவர். கிரிக்கெட் போட்டியின் மூலம் பரிசாகவும், விலை கொடுத்தும் ஏராளமான கார்களை பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். ஆனால், முதன்முதலாக தான் வைத்திருந்த ‘மாருதி 800’ கார் மீதுதான் சச்சினுக்கு அதிக பிரியமாம்.


ஆனால் தற்போது அந்த கார் அவரிடம் இல்லாத நிலையில், காரைப் பற்றி தகவல் தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்த சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் ‘‘என்னுடைய முதல் கார் மாருதி 800. துரதிர்ஷ்டவசமாக தற்போது அது என்னிடம் இல்லை. மீண்டும் அந்த கார் என்னுடையதாக இருக்க நான் விரும்புகிறேன். எனவே, அந்த கார் குறித்த தகவல்கள் தெரிந்த நபர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார். இந்த தகவலை சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.