விரைவில் இந்திய 20 ஓவர் அணிக்கு புது கேப்டன்..? அந்த வீரரை புகழ்ந்துதள்ளும் முன்னாள் வீரர்கள்

விரைவில் இந்திய 20 ஓவர் அணிக்கு புது கேப்டன்..? அந்த வீரரை புகழ்ந்துதள்ளும் முன்னாள் வீரர்கள்



rohith-sharma-has-more-chance-to-become-indian-t20-capt

இந்திய T20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது ஒருநாள் போட்டி, T20 , டெஸ்ட் போட்டி என அனைத்தும் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டுவருகிறார். துணைக்கேப்டனாக ரோஹித் ஷர்மா உள்ளார். இந்நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடந்து முடிந்த ஐபில் சீசனில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

மேலும் மும்பை அணியின் கேப்டனாக இருந்து அந்த அணிக்காக 5 வது முறையாக ஐபில் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார் ரோஹித் ஷர்மா. இதனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Rohith sharma

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறும்போது, "ரோகித் சர்மா ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக விளங்குகிறார். ஒரு வீரர்கள் இதற்குமேல் எப்படி சாதித்து காட்ட முடியும்? தோனியை ஒரு சிறந்த கேப்டன் என்று நாம் எதை வைத்து கூறுகிறோம்? அவர் இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பைகளை வாங்கிக்கொடுத்துள்ளார். மூன்று ஐபில் கோப்பைகளையும் வாங்கி சாதித்துள்ளார். அதுபோல் ரோஹித் ஷர்மாவும் ஐபில் அணியில் சிறந்த கேப்டனாக விளங்குவதால், அவரை T20 மற்றும் ஒருநாள் போட்டிக்கும், குறைந்தபட்சம் T20 அணிக்காவது அவரது கேப்டனாக நியமிக்கலாம் என காம்பிர் கூறியுள்ளார். இதுநடக்காவிட்டால் அது இந்திய அணிக்கு இழப்பே தவிர, அவருக்கு அல்ல" எனவும் காம்பீர் கூறியுள்ளார்.

Rohith sharma

அதேபோல், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், "கேள்விக்கே இடமின்றி, இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் எனவும், வீரர்களை வழிநடத்துவதில் அவர் ஒரு அற்புதமான தலைவர் எனவும், போட்டிகளில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்ற அந்த வியூகம் அவருக்கு தெரிந்துள்ளதாகவும் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்".

இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவு அதிகரித்துவருவதால் அவர் விரைவில் T20 இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.