சென்னை வீரருக்கு ஆசைய பாத்திங்களா..! அதுமட்டும் நடந்தா மேட்ச் வேற லெவல்ல இருக்குமே..!robbin-uthappa-want-to-score-1000-runs-in-single-ipl-se

நடைபெற இருக்கும் ஐபில் தொடரில் தனது ஆசை குறித்து பேசியுள்ளார் சென்னை அணி வீரர் உத்தப்பா.

இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் அனைத்து அணி வீரர்களும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக சென்னை அணி வீரர்கள் கடந்த சில வாரங்களாக பயிற்சியில் ஈடுபட்டுவந்தநிலையில் தற்போது மும்பை புறப்பட்டு சென்றுள்ளனர்.

கடந்த முறை முதல் சுற்றிலையே வெளியேறி ஏமாற்றமளித்த சென்னை அணி, இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. மேலும் சென்னை அணியின் பலத்தை கூட்ட சில புதிய வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்திய அணியின் அதிரடி வீரராக இருந்த ராபின் உத்தப்பாவை சென்னை அணி வாங்கியுள்ளது.

IPL Season 14

சென்னை அணியில் விளையாட இருக்கும் உத்பாவிடம், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில், 'என்ன சாதனையை முறியடிக்க ஆசைப்படுகிறீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த உத்தப்பா, "ஐபிஎல் சீசனில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையாளராக இருக்க ஆசைப்படுகிறேன்." என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், தனது தனிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணிக்கு சிறந்த வெற்றிகளை பெற்றுத்தர விரும்புவதாகவும், மிகவும் வலிமைமிக்க மும்பை அணியை வீழ்த்துவதும் தங்கள் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நடந்த ஐபில் சீசன்களில், 2016 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்களுடன் 973 ரன்கள் அடித்திருந்தார். ஒரு சீசனில் தனிப்பட்ட வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்.