விளையாட்டு

ஆட்டத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது பெங்களூர் அணி! இனி எதிர் அணிகளுக்கு திரில் காத்திருக்கு!

Summary:

RCB won first IPL Match against to Kings eleven panjaap

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 28 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. இதுவரை ஒரு போட்டிகளில் கூட வெற்றிபெறாத பெங்களூர் அணி நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று பஞ்சாபின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கெய்ல் இதுவரை ஆட்டம் இழக்காமல் 64 பந்துகளில் 99 ரன் எடுத்தார்.

அடுத்து ஆடிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர் பார்திவ் படேல் 9 பந்துகளில் 19 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து விளையாடிய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் டீ வில்லியர்ஸ் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்றனர். 53 பந்துகளில் 67 ரன் எடுத்திருந்த நிலையில் விராட்கோலி ஆட்டம் இழந்தார்.

அதன்பின் டீ வில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஸ்டோனிஸ் பெங்களூர் அணி வெற்றிபெற உதவி செய்தார். கடைசி ஓவரில் 6 ரன் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் இரண்டு ஓட்டமும்  எடுத்து பெங்களூர் அணி அசத்தல் வெற்றிபெற்றது. இனி வரும் அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றாலும் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்றாலும் இந்த வெற்றி அந்த அணிக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.


Advertisement