நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் அபார வெற்றி.! பிளே ஆப்பிற்கு போராடும் அணிகள்.!

நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் அபார வெற்றி.! பிளே ஆப்பிற்கு போராடும் அணிகள்.!


rajasthan royals won yesterday match

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டியின் 50வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் அபுதாபி மைதானத்தில் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். 

மந்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் ஓவரில் அவுட் ஆகினார்.  இதனையடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்து அற்புதமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 41 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய பூரான் 10 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய கிறிஸ் கெயில் இறுதி வரை  சிறப்பாக ஆடி 63 பந்துகளுக்கு 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் ஓவரில் அவுட் ஆனார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவிற்கு 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

ipl

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக ஆடியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 17.3  ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடனும், அதேபோல் பஞ்சாப் அணி  13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடனும்,  கொல்கத்தா  13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடனும், ஹைதராபாத்  12 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடனும்,  இருப்பதால், பிளே ஆப் சுற்றில் 4-வது இடத்திற்கு தகுதி பெறப் போகும் அணி யார் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.