புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கடைசி ஓவரில் சொதப்பிய பஞ்சாப் அணி.! இறுதி ஓவரை தெறிக்கவிட்ட கார்த்திக் தியாகி.!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது.
முதல் 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களும், முகமது ஷமி 3 விக்கெட்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். பஞ்சாப் அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 120 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 49 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து மயங்க் அகர்வால் 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
இறுதியில் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில் நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார் கார்த்திக் தியாகி.